அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!

அனர்த்தத்தால் வீடுகளை முற்றாக இழந்த மக்களுக்கான இழப்பீடு வழங்கும் நிகழ்வும், புதிய வீடுகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(09) அனுராதபுரம் மாவட்டத்தில் இடம் பெற்றது.

இதற்கான பிரதான நிகழ்வு அனுராதபுரம் ராஜாங்கனை விகாரைக்கு அருகில் இடம்பெற்றது.

அனுராதபுரம் மாவட்டத்தின் ராஜாங்கனை, தலாவ, நொச்சியாகம, மகாவிலச்சிய,பதவிய,கெபிதிகொல்லேவ, மிஹிந்தலை மற்றும் ரம்பேவ ஆகிய பிரதேசர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித் திட்டங்களே வழங்கிவைக்கப்பட்டன.

முற்றாக வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 50 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version