முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட ஐந்து சந்தேக நபர்களுக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை, எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் இன்று (09) வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராக இருந்தபோது சதோச லொறியை தவறாக பயன்படுத்தியதாக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புதிய கல்வி மறுசீரமைப்பு நிறைவேறும் – ஜனாதிபதி உறுதி!
அனர்த்தத்தால் வீடுகளை இழந்தவர்களுக்குபுதிய வீடுகளை அமைக்கும் பணிகள் ஜனாதிபதி தலைமையில் இன்று ஆரம்பம்!
குப்பைக்காடாக காட்சியளிக்கிறது வடமராட்சி கடற்கரை
கரவெட்டியில் 21 பவுண் தங்க நகை கொள்ளை!