உலகம்உள்நாட்டுசினிமா
Trending

கலைஞர் கெளரவிப்பும் திரையிசை வெளியீடும்!

சுவிற்சர்லாந்து உறவுகளும், நித்திலம் கலையகமும் இணைந்து நடாத்திய கலைஞர் மதிப்பளிப்பும், திரையிசை வெளியீடும், கிளிநொச்சி – முகமாலை சிவபுர வளாகத்தில் நேற்று(05) இடம்பெற்றது.

சிரேஷ்ட சட்டத்தரணி சோமசுந்தரம் தேவராஜா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஈழத் தமிழ் கலைஞர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தையும், ‘மகரந்தம்’ திரையிசையையும் வெளியிட்டு வைத்தார்.

இதன்போது, தூவானம் திரைப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் மற்றும் ஈழத் தமிழ் ஒன்றிய கலைஞர்கள் மதிப்பளிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சி.ரகுராம் மற்றும் யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரியின் முன்னாள் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் விருந்தினர்களாக கலந்து சிறப்பித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button