உள்நாட்டுகுற்றவியல்
Trending

நல்லூரில் சங்கிலி அறுத்தவர் நாவற்குழியில் மாட்டினார்!

யாழ்ப்பாணம்
நல்லூர் கோயில் வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் பணியாற்றும் பெண்ணின் தங்கச் சங்கிலியை அறுத்த திருடன் நாவற்குழியில் இன்று(02) பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கபட்டார்.

நல்லூர் கோவில் வீதியிலுள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்களை கொள்வனவு செய்து போல் வருகை தந்த நபரொருவர் அங்கு பணியாற்றிய பெண்ணின் தங்கச சங்கிலியை நேற்று(01) அறுத்துச் சென்றுள்ளார்.

அத்தோடு,மோட்டார் சைக்கிள் ஒன்றையும் ஆசிரியர் ஒருவரிடமிருந்து பறித்துக்கொண்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதனையடுத்து வர்த்தக நிலைbreakயத்திலிருந்த CCTV கமரா ஊடாக குறித்த நபரை இனங்கண்ட நாவற்குழி மக்கள் சந்தேகநபரை பிடித்து சாவகச்சேரி பொலிஸாரிடம் இன்று ஒப்படைத்தனர்.

இதன்போது சந்தேக நபரிடமிருந்த 3 இலட்சம் ரூபா பணமும் மீட்க்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றச் செயல்கள் யாழ்.பொலிஸ் நிலைய பகுதிக்குள் இடத்பெற்றறிருந்ததால், சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த சந்தேக நபர் பல்வேறு குற்றச் செயல்களோடு தொடர்புடையவர் எனவும், சிறைத் தண்டனை பெற்று ஒருவாரத்துக்கு முன்னரே விடுதலையானவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button