கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் கௌரவ அமைச்சரும், ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான இரா.சந்திரசேகர், வடக்கு மாகாண ஆளுநரும் இணைத் தலைவருமான நா.வேதநாயகன் ஆகியோரின் பங்கேற்புடன் மாவட்டச் செயலக திறன்விருத்தி மண்டபத்தில் இன்று(06) இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரனின் வரவேற்புரையோடு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் ஆரம்ப உரை இடம்பெற்றது.
இதன் பின்னர் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்கள் ஆராயப்பட்டன.
தொடர்ந்து, பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படவேண்டிய விடயங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், கடந்த ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்களின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டன.
இந்த கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.இளங்குமரன், சி.சிறிதரன், ஜெ.றஜீவன், உள்ளூராட்சி சபைகளின் தவிசாளர்கள், வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

வீதியைப் புனரமைக்காமைக்கு விளக்கமளிக்க முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பணிப்பு!
யாழ்.பல்கலையில் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வு!
புலிக்கொடியை அங்கீகரித்த கனடாவின் பிரம்டன் நகரம்!
கொடிகாமம் மாவீரர் துயிலும் இல்ல ஆரம்பநாள் நினைவேந்தல்!