உள்நாட்டு

யாழ்.தலைமை பொலிஸ் அத்தியட்சகர் – அரசாங்க அதிபர் சந்திப்பு!

யாழ்ப்பாண தலைமை பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம். பாலித செனவிரத்ன, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை சந்தித்துக் கலந்துரையாடினார்.

இந்தச் சந்திப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று(03) இடம்பெற்றது.

இதன்போது யாழ் நகர் பாதுகாப்பு மற்றும் வீதி போக்குவரத்து ஒழுங்குகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சட்டவிரோத மண் அகழ்வு , திருட்டு மற்றும் போதைப்பொருள் பாவனை என்பவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் பொலிஸ் அத்தியட்சகர் அரச அதிபருக்கு தெளிவுபடுத்தினார்.

11 இடங்களில் போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸார் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்,அதில் யாழ் நகரப்பகுதிகளில், வேம்படிச் சந்தி, ஶ்ரீநாகவிகாரைச் சந்தி, மின்சார நிலைய வீதிச்

சந்தி மற்றும் காங்கேசன்துறை வீதிச் சந்தி போன்ற இடங்களில் பொலிஸார் நிரந்தர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் அத்தியட்சகர் சுட்டிக்காட்டினார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button