மாவீரர் நினைவேந்தல் நிகழ்வும், கெளரவிப்பும்!

யுத்தத்தில் உயிர் நீத்த மாவீரர்களின் நினைவேந்தல் நிகழ்வும், பெற்றோர்கள் மற்றும் உரித்துடையவர்கள் கெளரவிப்பும்
யாழ்.தென்மராட்சி கைதடி இணுங்கித் தோட்டம் அன்னை இரத்தினம் மணிமண்டபத்தில் நேற்று(26) பிற்பகலில் இடம்பெற்றது.

முதலில் ஈகைச்சுடர் ஏற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத்தொடர்ந்து உயிர்நீத்தவர்கள் நினைவாக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், பிரதேச சபை, நகரசபை உறுப்பினர்கள், மதத்தலைவர்கள், மாவீரர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Exit mobile version