இயல்பு நிலைக்கு திரும்பும் யாழ் குடாநாடு!

வெள்ள அனர்த்தம் காரணமாக ஸ்தம்பிதம் அடைந்திருந்த யாழ் குடாநாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பிவருகிறது.

கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக யாழ் குடா நாட்டின் தாழ்நிலப் பகுதிகளில் இருந்த குடியிருப்புகளுக்குள் வெள்ளம் நிறைந்திருந்தது.

அதன் காரணமாக யாழ் குடாநாட்டில் 9154 குடும்பங்களைச் சேர்ந்த 29,439 பேர் 43 இடத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.இந்த நிலையில் தற்போது குறைவடைந்து வெள்ளம் வழிந்தோட ஆரம்பித்துள்ளது .

இதன் காரணமாக யாழ் குடா நாடு சிறிது சிறிதாக இயல்பு நிலைக்கு திரும்ப வருகிறது.

Exit mobile version