கொலம்பியாவின் அன்டியோகுவியா (Antioquia) மாகாணத்திலுள்ள பாடசாலை ஒன்றின் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்துள்ளதோடு, 20 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தச்சம்பவம் அந்நாட்டு நேரப்படி நேற்று(14) அதிகாலை காலை 5.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
அன்டியோக்வெனோ உயர்நிலைப் பாடசாலையின் மாணவர்களை ஏற்றச் சென்ற பேருந்தே 80 மீற்றர் ஆழமான பள்ளத்தாக்கில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
பட்டமளிப்பு விழாவைக் கொண்டாடுவதற்காக பயணித்துவிட்டு கரீபியன் நகரமான டோலுவிலிருந்து (Tolú) மெடலின் (Medellín) நோக்கித் திரும்பிக்கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களில்16 மாணவர்களும், பேருந்தின் சாரதியும் அடங்குவர். சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

சிட்னி – போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த ‘ஹீரோ’!
ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
திருக் கார்த்திகை விளக்கீடு