அவுஸ்திரேலியா நாட்டின் தலைநகரான சிட்னியிலுள்ள போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரிடமிருந்து துப்பாக்கியைப் பறித்த “ஹீரோ” CCTV கமராவில் சிக்கியுள்ளார்.
அந்த நபர் 43 வயதான அகமது அல் அகமது என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
CCTV கமராவில், துப்பாக்கியால் சுடும் நபரை நோக்கி ஓடிய அகமது, அவரது ஆயுதத்தைப் பறித்து, பின்னர் அதை அவர் பக்கம் திருப்பி, தாக்குதல் நடத்தியவரை பின்வாங்கச் செய்வது போன்ற காட்சி உள்ளது.
இதன்போது அகமதுவின் கையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
அதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இரண்டு குழந்தைகளுக்குத் தந்தையான அகமது, போட்டி கடற்கரையில் ஒரு பழக் கடை நடாத்தி வருகிறார்.
இந்தநிலையில், போண்டி கடற்கரையில் நேற்றிரவு(14) நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்திருந்தனர்.
ஹானக்கா பண்டிகையைக் கொண்டாட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூடியிருந்த நிகழ்வின் போது இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
ஹானக்கா என்பது யூதர்கள் ஆண்டுதோறும் கொண்டாடும் ஒரு பண்டிகையாகும்.
அவுஸ்திரேலிய பொலிஸார் இதை யூத சமூகத்தை இலக்காகக் கொண்ட ‘பயங்கரவாத தாக்குதல்’ என்று அறிவித்துள்ளனர்.

கொலம்பியாவில் பேருந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்ததில் 17 பேர் பலி!
ஜப்பானில் 6.7 ரிக்டரில் நிலநடுக்கம்!
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!
திருக் கார்த்திகை விளக்கீடு