இலங்கைக்கு வருகைதந்த சுவிட்சர்லாந்தின் உதவிக் குழு 20 வரை தங்கியிருக்கும்!

இலங்கையில் ஏற்பட்ட பெரும் அனர்த்தத்தின் பின்னர், மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக வருகைதந்த சுவிட்சர்லாந்தின் ஏழு நிபுணர்களைக் கொண்ட விரைவு அவசர உதவிக் குழு எதிர்வரும் 20 ஆம் திகதிவரை இலங்கையில் தங்கியிருந்து உதவிகளை வழங்கவுள்ளது.

சுவிட்சர்லாந்து விரைவு அவசர உதவிக் குழு, கடந்த
6 ஆம் திகதி இலங்கை வருகைதந்தது.

நீர், சுகாதாரம் மற்றும் தூய்மை, பண உதவி மற்றும் தற்காலிக தங்குமிடம் ஆகிய துறைகளில் சிறப்பு அனுபவம் கொண்ட நிபுணர்களே அந்தக் குழுவில் அடங்குகின்றனர்.

இந்தக் குழுவினர் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.

40 ஆயிரம் லீற்றர் கொள்ளளவு கொண்ட 6 நீர் சேமிப்பு தாங்கிகள், தண்ணீர் குழாய்கள், நீர் இறைக்கும் இயந்திரங்கள் மற்றும் இணைப்புக் குழாய்கள் என உதவு பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த மனிதாபிமான தேவைகளுக்காக 4 இலட்சத்து 50 ஆயிரம் சுவிஸ் பிராங் நிதியை சுவிட்சர்லாந்து அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த உதவித் திட்டங்கள் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து, அவர்களின் இயல்பு வாழ்க்கையை விரைவில் மீட்டெடுக்க உதவும் என தூதுக்கு தெரிவித்துள்ளது.

Exit mobile version