இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட பரா ரூமி, சுவிட்சர்லாந்து தேசிய பேரவையின் இரண்டாவது துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
பரா ரூமி, 1991 டிசம்பர் 28 ஆம் திகதி இலங்கை யின் கொழும்பில் பிறந்தார்.
தனது 6 ஆவது வயதில் பெற்றோருடன் சுவிட்சர்லாந்து சென்று குடியேறினார்.

2021 ஆம் ஆண்டு Solothurn மாநிலத்திற்கு கண்டோனுக்கு முதல் முறையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டதையடுத்து அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
2023 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டார்.
இதன் மூலம் சுவிட்சர்லாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்வான முதல் இலங்கை வம்சாவளி நபர் என்ற பெருமையைப் பெற்றார்.

தனது புதிய பதவி குறித்து பரா ரூமி குறிப்பிடும்போது, “எனது புதிய பதவியில், தேசிய கவுன்சிலின் துணைத் தலைவராக நான் ஒவ்வொரு நாளும் புதிய அறிவுகளைப் பெறுகிறேன்.
ஜனாதிபதி இல்லாத நிலையில் இரு முறை கவுன்சிலை வழிநடத்த எனக்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஒரு கடினமான மற்றும் பொறுப்பான பணியாக இது அமைகிறது. இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது” – என்றார்.

கவிஞர் வெற்றி துஷ்யந்தனின் “ஒரு தேசம் இருந்தது” கவிதை நூல் வெளியீடு!