ஜெஹான் பெர்னாண்டோவுக்கு 09 வரை விளக்கமறியல்!

நிதிக் குற்றப் பிரிவிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவின் மகன் ஜெஹான் பெர்னாண்டோ, எதிர்வரும் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சதொசாவுக்கு சொந்தமான லொறி மற்றும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றசாட்டில் அவர் நிதிக் குற்றப் பொலிஸாரால் நேற்று(31) கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில்,
வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் றொஹான் பெர்னாண்டோ ஆஜர்ப்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 09 திகதி வரை விளக்கமறியலில் வைக்க வத்தளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version