சுலக்ஷி ரணதுங்கா, “சியத மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா” பட்டத்தின் பாரம்பரியத்தை முன்னெடுத்த இரண்டாவது ராணியாகத் திகழ்கிறார்.
சுலக்ஷி ரணதுங்க, கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற பிரம்மாண்டமான இறுதிப்போட்டியில் “சியத லக்ஸ் மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா 2014” பட்டத்தை வென்றவர்.
அதே இரவில் அவர் மிஸ் பெர்சனாலிட்டி மற்றும் கிழக்கத்திய சிறந்த ஆடை அணிவகுப்பு (Best in Eastern Wear) ஆகிய பட்டங்களையும் வென்றார்.
8 மில்லியன் ரூபா மதிப்புள்ள, முழுமையாக தங்கத்தில் தயாரிக்கப்பட்டு விலைமதிப்புமிக்க ரத்தினங்களாலும், அரை ரத்தினங்களாலும், அலங்கரிக்கப்பட்ட மகத்தான கிரீடத்தை அணிந்த சுலக்ஷி, 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் “சியத மிஸ் வேர்ல்ட் ஸ்ரீலங்கா” போட்டியில் முதல் ரன்னர்-அப்பராக இருந்ததன் பின்னர், இரண்டாவது ராணியாக உயர்ந்தார்.


லண்டனில் நடைபெற்ற 64ஆவது “மிஸ் வேர்ல்ட்” போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய அவர், மிஸ் வேர்ல்ட் பிரபலங்களில் முதல் 50 இறுதிப்போட்டியாளர்களுள் இடம்பிடித்தவர்.
2017 ஆம் ஆண்டு, ஸ்பெயினில் நடைபெற்ற போட்டியில் “Best Female Model of the World” என்ற உலகளாவிய பட்டத்தை வென்று, மீண்டும் இலங்கையின் பெருமையை உலக மேடையில் உயர்த்தினார்.
அதே ஆண்டில், பிரியந்த கொலபகே இயக்கிய “Dedunu Akase”(டேதுனு அகசே) திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, இலங்கை சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தனது பயணத்தை தொடங்கினார்.


அவரது நடிப்புத் துறை விரைவில் மலர்ச்சி கண்டது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 35ஆவது “சரஸவிய” திரைப்பட விருதுகளில், Vijayaba Kollaya(விஜயபா கொல்லய) திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை விருதைப் பெற்றார்.
அதன் பின்னர், 2 ஆவது Popular Awards விழாவில் மிகவும் பிரபலமான நடிகை விருதையும் வென்றார்.
சமீபத்தில், Midunu Vishwaya திரைப்படத்தில் நடித்ததற்காக 9ஆவது “தெரன” திரைப்பட விருதுகளில் சிறந்த துணை நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார்.
சினிமா திரை முதல் வெள்ளித்திரை வரை, சுலக்ஷி ரணதுங்க, அழகு, திறமை மற்றும் இலங்கையின் பெருமையை பறைசாற்றிக்கொண்டிருக்கிறார்.

கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!
உலக தமிழாராட்சி மாநாட்டு படுகொலையின் 52 ஆவது நினைவேந்தல் நிகழ்வு!
அரியாலையில் ரயிலுடன் மோதுண்டு இளைஞர் படுகாயம்!
மின் கம்பத்தோடு மோதுண்டு அம்பியூலன்ஸ் விபத்து: இருவர் காயம்!