நாட்டில் அனர்த்தம் ஏற்பட்ட போதிலும், நமது நாட்டை தரிசிக்க விரும்பும் வெளிநாட்டவரின் ஆர்வமும், வருகையும் இன்னும் குறையவில்லை. கொழும்பு துறைமுகத்திற்கு நேற்று (4) வந்த ஆடம்பரமான ‘மைன் ஷிஃப்’ கப்பலை வரவேற்பதில் வெளிவிவகார அமைச்சர் இணைந்து கொண்டார்.

TUI குரூஸால் இயக்கப்படும் 900 பணியாளர்களைக் கொண்ட ஜெர்மன் கப்பலான ‘மைன் ஷிஃப்’ 2700 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தது.

கேப் டவுனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் வழியில் இலங்கை வந்துள்ள இந்தக் கப்பலில் வந்துள்ள திருமதி மார்கிராட் என்பவர் 1992 ஆம் ஆண்டு, இலங்கைக்கு விஜயம் செய்தபோது, வாங்கிய நெக்லஸை இன்னும் அணிந்திருப்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளார்.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!