இலங்கைஉலகம்
Trending

மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்கள் மீட்ட இலங்கைக் கடற்படை!

இலங்கையை அண்டிய சர்வதேச கடற்பரப்பில் மூழ்கிக்கொண்டிருந்த ஈரான் கப்பலில் இருந்தவர்களை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று(04) உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஈரானை சேர்ந்த ‘ஐரிஸ் தேனா’ (Iris Dena) என்ற கப்பலானது,காலியிலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில் மூழ்கிக்கொண்டிருப்பதாக இன்று காலை 5 மணியளவில் அபாய சமிக்ஞை வழங்கப்பட்டிருந்தது.

அதனையடுத்து இலங்கை கடற்படையின் இரு கப்பல்கள் மற்றும் விமானம் ஒன்றின் உதவியுடன் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கப்பலிருந்து மீட்க்கப்பட்ட 30 பேர்
சிகிச்சைக்காக காலி கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related Articles

Back to top button