வீதிப் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு!

யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலையத்தால் ஏற்பாட்டுல் வீதிப் பாதுகாப்பு மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் இன்று(29) இடம்பெற்றது.

கல்லூரி முதல்வர் தலைமையில் இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வில், யாழ்ப்பாணம் தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வின் பிரதான வளவாளராக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண இணைப்பாளர் எம்.எம்.ஜி.பி.எம்.றசாட் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் 750ற்கும்அதிகமான மாணவிகள் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.


Exit mobile version