T20 13 ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி!
ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையில் அகமதபாத் – நரேந்திரமோடி மைதானத்தில் நேற்று (11) நடைபெற்ற உலக கிண்ண 20க்கு20 தொடரில் 13ஆவது போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் மூலம் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய,முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்று கொண்டது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 10 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று போட்டியை சமன் செய்தது.
இதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்க சுப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட்டது.
முதலாவது சுப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 17 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு தென்னாபிரிக்க அணி, ஒரு ஓவரில் எந்த விக்கெட்டையும் இழக்காமல் 17 ஓட்டங்களை பெற்றது. இதனால் போட்டி மீண்டும் சமநிலையானது.
அதனால் இரண்டாவது சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது.
இரண்டாவது சுப்பர் ஓவரில் தென்னாபிரிக்க அணி, ஒரு ஓவரில் விக்கெட்டு இழப்பின்றி 23 ஓட்டங்களைக் குவித்தது.
பதிலுக்கு ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் ஒரு விக்கெட்டை இழந்து 19 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இதன் பிரகாரம், ஆப்கானிஸ்தான் – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான போட்டியில் தென்னாபிரிக்க அணி சுப்பர் ஓவர் முறையில் வெற்றி பெற்றது.

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் பதவியை இழந்தார் சோஹாரா புகாரி!
பெப்ரவரி அஸ்வெசும உதவி வங்கிகளுக்கு அனுப்பி வைப்பு!
T20 12 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி