யாழ்.செம்மணி மனித புதைகுழியில், மழை அங்கியை ஒத்த அங்கியோடு,சிறுவரின் என்புக்கூட்டுடன் 7 என்புக் கூடுகள் நேற்று(23) அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை 56 நாட்கள் முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது.
அதற்கமைய 41ஆவது நாளான நேற்று (23) 07 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டதில் 09 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
மேலும்,மூன்று என்புக் குவியல்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளதோடு,ஆணிகளும் சீமெந்து துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் செம்மணி புதைகுழியில் முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டம் என இதுவரையில் 95 நாட்கள் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் , 478 என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், 464 என்பு கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!