
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பிரதிவாதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த நீதிமன்றம், இந்த வழக்கை, முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.
தகுந்த தகுதிகளைப் பூர்த்தி செய்யாத பின்னணியில், பிரதிவாதியான யோஷித ராஜபக்ஷவை பிரித்தானியாவின் ரோயல் கடற்படை பயிற்சி முகாமிற்கு பயிற்சிக்காக அனுப்பியதன் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!
13ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் காணிவிடுவிப்பு போராட்டம்!