அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்ட ஈரான் மாலுமிகள் விடுதலை!

அமெரிக்காவால் கடலில் வைத்து சிறைபிடிக்கப்பட்ட ‘லெனோர் டவினா’ கப்பலைச் சேர்ந்த 22 ஈரான் மாலுமிகள் அமெரிக்கா விடுவித்துள்ளது.

விடுதலை செய்யப்பட்டவர்கள் பாகிஸ்தானின் கராச்சி நகரை வந்தடைந்துள்ளதாக அந்த நாட்டின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான கடல்சார் வர்த்தகத் தடையின் போது இந்த மாலுமிகள் அமெரிக்காவால் சிறைபிடிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து “விடுவிக்கப்பட்ட மாலுமிகளை ஈரானுக்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கையை பாகிஸ்தான் மேற்கொண்டுள்ளது.

பாகிஸ்தானின் தலையீட்டால் விடுவிக்கப்பட்ட ஈரான் மாலுமிகளின் நான்காவது குழு இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version