அயர்லாந்துடனான போட்டியில் இலங்கை 20 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையில், கொழும்பு ஆர் பிரேமதாச விளையாட்டு அரங்கில் நேற்றிரவு நடைபெற்ற உலகக் கிண்ண T20 ஆறாவது போட்டியில், இலங்கை அணி 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்த அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய துடுப்படுத்த ஆடிய இலங்கை அணி 3.6 அவர்களின் 28 ஓட்டங்களை பெற்றபோது தனது முதலாவது விக்கெட்டை இழந்தது. கமில மிசார 14 ஓட்டங்களொடு ஆட்டமிழந்து சென்றார்.

இலங்கை அணியின் இரண்டாவது விக்கெட் 8.2 ஓவர்களில் வீழ்த்தப்பட 24 ஓட்டங்களோடு பத்தும் நிசங்க ஆட்டம் இழந்தார்.

மூன்றாவது விக்கெட் 10.1 ஓவர்களில் வீழ்த்தப்பட பவன் ரத்நாயக்க 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இலங்கை அணியின் நான்காவது விக்கெட் 13.5 ஓவர்களில் வீழ்த்தப்பட்டது.தமிழ் வெல்லகே 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அதனைத் தொடர்ந்து கவிந்து மெண்டிஸ் – குசல் மெண்டிஸ் இணை சிறந்த முறையிலே துடுப்படுத்த ஆடினார்.

இலங்கையணி 153 ஓட்டங்களை பெற்றபோது 5 ஆவது விக்கெட் வீழ்த்தப்பட்டது. 18.4 ஓவர்களில் கமிந்து மெண்டிஸ் 44 ஓட்டங்களோடு ஆட்டம் இழந்தார்.

இலங்கை அணியின் 6ஆவது விக்கெட் ஓட்டம் எதுவும் பெறப்படாமல் இழக்கப்பட்டது. டசும் சானக்க ஓட்டங்கள் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 163 ஓட்டங்களைப் பெற்றது.

164 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு ஆடிய அயர்லாந்து அணி 19.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

அதனடிப்படையில் இலங்கை அணி போட்டியில் 20 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இதேவேளை இன்றைய தினம் 3 போட்டிகள் இடம்பெறவுள்ளன.

கல்கத்தாவில் இடம்பெறவுள்ள போட்டியில் ஸ்கோட்லாந்து – இத்தாலி அணிகள் மோதவுள்ளன.

கொழும்பில் நடைபெறவுள்ள 8 ஆவது போட்டியில் ஓமான் – சிம்பாபே அணிகள் மோதவுள்ளன.

அகமதாபாத்தில் நடைபெறவுள்ள ஒன்பதாவது போட்டியில் தென் ஆப்பிரிக்கா – கனடா அணிகள் மோதவுள்ளன.

Exit mobile version