யாழ்ப்பாணம் – வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் உத்தரவை மீறி கடமையிலிருந்த பொலிஸாரை மோதிவிட்டு தப்பிச்செல்ல முற்பட்ட ஹயஸ் ரக வாகனம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 17 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்கார்.
குறித்த சம்பவம் இன்று (10) அதிகாலை 1.15 மணியளவில் அல்லைப்பிடியில் இடம்பெற்றுள்ளது.


சம்பவம் குறித்து தெரியவருகையில்,
வேலணை – அல்லைபிட்டிப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான ஹயஸ் வாகனம் ஒன்று, இன்று அதிகாலை 1.15 மணியளவில் சென்றுள்ளது.
குறித்த வாகனத்தை அப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார வழிமறித்து சோதனை செய்ய முற்பட்டுள்கனர்.


இருந்தும் பொலிஸாரின் உத்தரவை மீறி குறித்த வாகனம் அதிவோகமாக சென்றுள்ளது. சென்ற வாகனம் மீண்டும் பொலிஸாரை மோதித் தள்ளிவிட்டு தப்பிச் செல்லும் நோக்கில் அதிவேகமாக வந்தை அவதானித்த பொலிஸார் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞர் படுகாயமடைந்தார்.
காயமடைந்த நபரை பொலிஸார் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் சம்பவத்தின் போது குறித்த வாகனத்தில் வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் பகுதிகளைச் சேர்ந்த மூவர் பயணித்த நிலையில் ஏனைய இருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்

T20 12 ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி!
நானுஓயா-ரதல்ல திடீர் விஜயம்: தோட்டத் தொழிலாளர்களை நேரில் சந்தித்த ஜனாதிபதி
இலங்கைப் போக்குவரத்து சபையினால் பெண் நடத்துநர்கள் நியமனம்!
ஆவரங்கால் – தொண்டைமானாறு வீதிப் புனரமைப்பை ஆரம்பித்து வைத்தார் அமைச்சர் பிமல் ரத்நாயக்க!