இலங்கையிலுள்ள தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


அரச சேவையிலுள்ள பட்டதாரிகள் மற்றும் அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள் என இரு தரப்பினரும் இந்த வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
அரச சேவையிலுள்ள பட்டதாரிகள்: இவர்களுக்கான இணையவழி விண்ணப்ப முறைமை இன்று (05) முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி பெப்ரவரி 19 ஆம் திகதி இரவு 9.00 மணி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அரச சேவையில் இல்லாத பட்டதாரிகள்: ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கக்கூடிய இந்தச் சந்தர்ப்பத்திற்கான இணையவழி முறைமை பெப்ரவரி 20 ஆம் திகதி முற்பகல் 9.00 மணிக்கு ஆரம்பமாகி, மார்ச் 05 ஆம் திகதி முற்பகல் 9.00 மணியுடன் நிறைவடையும்.


இதற்கான விண்ணப்பங்களை இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.doenets.lk ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, விண்ணப்பங்களை இணையவழி முறைமையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என்பத்தோடு ஏனைய முறைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களை பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் பதவி நீக்க, மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில்!
மீள ஆரம்பிக்கப்பட்ட செம்மணி புதைகுழி அகழ்வு: சிறுவர்கள் இருவரின் என்புக் கூடுகள் அடையாளம்!
யாழ்.மீசாலையில் அஸ்வெசும பயனாளிக்கு வீடு கையளிப்பு!
புதுக்குடியிருப்பில் பாடசாலை மாணவர்களுக்குடையில் மோதல்: மூவருக்கு விளக்கமறியலில்!