ஆட்பதிவுத் திணைக்களத்தின் பொதுச் சேவைகள் இன்று (24) தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கணனி அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்றைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, ஆட்பதிவுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் இன்றைய தினம் பொதுச் சேவைகள் இடம்பெறாது.
மேலும், ஆளடையாள அட்டை விநியோகத்திற்கான ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இடம்பெறாதென ஆட்பதிவுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ்.வல்லை வீதிவிபத்தில் ஆலய பூசகர் பலி!
டில்லு குழுவினருக்கு 9 ஆம் திகதிவரை விளக்கமறியல்!
அனோஜனுக்கு மன்னிப்பு வழங்க கோரி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவுதி அரேபிய மன்னருக்கு கடிதம்!
தெற்கு கடற்பரப்பில் மீட்க்கப்பட்ட இந்தோனேசிய கடற்றொழிலாளர்கள் கொழும்புக்கு அழைத்து வருகை!