ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், பெங்களூர் றோயல்ஸ் சலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் 16 ஆவது இன்றிரவு (10) இடம்பெறவுள்ளது.
இந்தப் போட்டி குவாகட்டி ACA மைதானத்தில் இன்றிரவு 7.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
இதேவேளை, லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையில் நேற்றிரவு(09) இடம்பெற்ற இந்தியன் பிரீமியர் லீக் 15 ஆவது போட்டியில், லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணி, 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற
லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ்
அணி, களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய, முதலில் துடுப்படுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 181 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அதற்கமைய, இந்தியன் பிரீமியர் லீக் , 15 ஆவது போட்டியில் லக்னோ சூப்பர் ஜாயன்ட்ஸ் அணி, 3 விக்கெட்களால் வெற்றி பெற்றது.

நாடாளுமன்றத்தில் பெரும் பரபரப்பு: சாணக்கியன் எம்பியை வெளியேற்றுவதாக சபாநாயகர் எச்சரிக்கை!
க.பொ.த. சாதாரண தர அழகியல் பாட செய்முறை பரீட்சை 22 முதல் ஆரம்பம்!
அதிஷ்ட லாப சீட்டில் வெல்லப்பட்ட அதிகூடிய தொகை வழங்கி வைப்பு!
யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு மூன்று மாடிகளைக் கொண்ட 30 வகுப்பறைகளுக்கான புதிய கட்டடத் தொகுதிக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.