தோனியுடன் தீவிர பயிற்சியில் ரிஷப் பண்ட்!

இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.

இதன் ஒரு பகுதியாக, முன்னாள் இந்திய அணித் தலைவர் மகேந்திர சிங் தோனியுடன் ராஞ்சியிலுள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் ரிஷப் பண்ட் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

இந்த பயிற்சியின் புகைப்படத்தை, இந்தியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் நதீம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில், ரிஷப் பண்ட் முக்கிய வீரராக இடம்பெற்றுள்ள நிலையில், இலங்கை தொடரில் அவரிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.

எனினும், நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைவராக விளையாடிய அவர், 312 ஓட்டங்களை எடுத்து எதிர்பார்த்த அளவுக்கு பிரகாசிக்கத் தவறியுள்ளார்.

இதற்கிடையில், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற இந்திய அணி, எஞ்சியுள்ள 9 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 7 வெற்றிகளைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version