இந்தியன் பிரீமியர் லீக் கிண்ணத்தை பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி தானதாக்கிக்கொண்டுள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையில், நேற்றிரவு (31) இந்தியன் பிரீமியர் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
அதில் பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி 5 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று கிண்ணத்தை வென்றுள்ளது.
அகமதாபாத் நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பெங்களூர் ரோயல் சேலஞ்சர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 155 ஓட்டங்களை பெற்றது.
பதிலுக்கு துடுப்படுத்தாடிய பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 161 பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.

உக்ரைனின் வணிக வளாகத்தின் மீது ரஷ்யா நடாத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் 5 பேர் பலி: 67 பேர் காயம்!
பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி போடியில் இலங்கை – பாகிஸ்தான் இன்று களத்தில்!
சாலமன் பாப்பையா காலமானார்!
இலங்கை 20 மில்லியன் டொலர் வருமானத்தை இழந்தது!