பெண்கள் ஆசிய கோப்பை அரையிறுதி போடியில் இலங்கை – பாகிஸ்தான் இன்று களத்தில்!

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.

இந்தப் போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று (11) இலங்கை நேரப்படி இரவு 8 மணியளவில் நடைபெறவுள்ளது.

பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் கடந்த மாதம் 28ம் திகதி ஆரம்பமானது.

இன்று நடைபெறும் அரையிறுதியில் வெற்றிபெறும் அணி நாளை மறுதினம் (13) நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ளவுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version