இந்திய அயர்லாந்து இடையிலான T20 தொடரை கைப்பற்றியது அயர்லாந்து!

இந்திய மற்றும் அயர்லாந்து அணிகளுக்கிடையிலான 2 ஆவது T20 கிரிக்கெட் போட்டியில் அயர்லாந்து அணி ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்று தொடரை தனதாக்கிக்கொண்டுள்ளது.

அயர்லாந்து பெல்பாஸ்ட்டில் சிவில் சர்வீஸ் கிரிக்கெட் கிளப் மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில்,

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணியின் சார்பில் ஹரி டெக்டர் (Harry Tector) 53 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் ப்ரின்ஸ் யாதவ் (Prince Yadav) 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தநிலையில் 155 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 153 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் இந்திய அணியின் சார்பாக திலக் வர்மா 55 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.

இதற்கமைய இரு போட்டிகள் கொண்ட T20 தொடரை 2-0 என்ற கணக்கில் அயர்லாந்து அணி கைப்பற்றியுள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version