இலங்கைக்கு கடத்தப்பட்ட பெருந்தொகை போதை பொருள் மீட்பு!

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு கடத்திவரப்பட்ட பெருந்தொகை குஷ் போதை பொருள் கட்டுநாயக்க விமான நிலைய,த்தில் இன்று(10) மீட்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து பேங்க்கொக் நகரில் இருந்து கனேடியர்கள் இருவரால் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 32.159கிலோகிராம் போதை பொருளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட போதை பொருளின் சந்தை பெறுமதி 32 கோடி என சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Swing Ad
Tamil World Radio Ad
↑
Exit mobile version