இலங்கைவடக்கு மாகாணம்
Trending

கனகராயன் குளத்தில் இளம் தம்பதிகளின் சடலம் மீட்பு

வவுனியா, கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன் மற்றும் மனைவியின் சடலம் மீட்கப்பட்டதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இருந்துள்ளனர்.
இருவருக்கும் குடும்பத் தகராறு ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதனால் நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் அதேபகுதியை சேர்ந்த
22 வயதுடைய கணவனும் 19 வயதுடைய மனைவி ஆகிய இளம் தம்பதியே சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

Related Articles

Back to top button