ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இன்று (08) காலை இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தெற்கு ஈரானின் சிரிக், குவாசிம் தீவு, பண்டர் அப்பாஸ், கார்க் தீவு ஆகிய பகுதிகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஈரானின் ரேடார் அமைப்பு, ஏவுகணை அமைப்பு, ஆயுத கிடங்குகள் உட்பட 80 இலக்குகளை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதனிடையே, ஓமன் வளைகுடா பகுதியில் ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற 3 சரக்கு கப்பல்கள் மீது ஈரான் நேற்று (07) ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.
ஓமனின் லிமாஹ் பகுதியில் அருகே சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்தநிலையில், வர்த்தகக் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அமெரிக்கா, ஈரானின் முக்கிய இடங்களை குறிவைத்து இன்று தாக்குதல் நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி!
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவுக்கு 7 வருட கடூழிய சிறைத்தண்டனை!
பணின் விலை 10 ரூபாவால் அதிகரிப்பு!
வெல்லே சாரங்க துயாயில் கைது!