அனர்த்தம் காரணமாக, 2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் சில பாடங்களுக்குத் தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கான பரீட்சைகள், இம்மாதம் 12 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களால் நாட்டின் பல பாகங்களிலும் பரீட்சை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருந்தன.
இக்காலப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பரீட்சைகளுக்குச் சமூகமளிக்க முடியாத மாணவர்களுக்காகவே இந்த புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக அறிந்துகொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!