ஏரியில் தாமரை மலர்கள் பறிக்கச் சென்ற மாணவர்கள் நால்வர் பலி!

புத்தளம் வனாத்தவில்லு, மங்களபுர பகுதியில் அமைந்துள்ள ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காகச்சென்ற பாடசாலை மாணவர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

மலர்களைப் பறிப்பதற்காகத் தெப்பத்தில் ஐந்து மாணவர்கள் நேற்று(30) நண்பகலில் சென்றுள்ளனர்.

இதன்போது தெப்பம் கவிழ்ந்ததில் மாணவர்கள் நீரில் மூழ்கினர்.

அவர்களில் ஒரு மாணவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய நான்கு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 11ஆம் தரத்தில் கல்வி பயிலும் மீணவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Swing Ad
Tamil World Radio Ad
Exit mobile version