வளைகுடா பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஈரான் முன்னெடுத்துள்ள இந்தத் தாக்குதல்களை “பயங்கரவாதத் தாக்குதல்” என ஐக்கிய அரபு இராச்சியம் வர்ணித்துள்ளது.

இந்தநிலையில், ஹப்ஷான் மற்றும் பாப் ஆகிய முக்கிய இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களை, ஐக்கிய அரபு இராச்சியத்தின் வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக இடைமறித்து அழித்துள்ளன என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தத் தாக்குதல்களின் போது எந்தவொரு உயிரிழப்போ அல்லது காயங்களோ ஏற்படவில்லை எனவும் வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல், சர்வதேச சட்டக் கொள்கைகளை மீறும் ஒரு “அபாயகரமான விரிவாக்கம்” என ஐக்கிய அரபு இராச்சிய வெளிவிவகார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்தநிலையில், நாட்டின் இறையாண்மை, தேசிய பாதுகாப்பு மற்றும் சாதனைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கான முழு உரிமையும் தமக்கு இருப்பதாக அரபு இராச்சியம் எச்சரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க அமெரிக்காவிற்கு ஈரான் நிபந்தனை விதித்தது!
துருக்கியின் மனிசாவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 11 மாணவர்கள் காயம்!
சவூதி அரேபியாவின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதி அமைப்பு!
பயணிகளோடு காணாமல் போன கப்பல் கண்டுபிடிப்பு: 140 பேர் மாயம் :ஒருவர் பலி!