கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட செயலகத்தில் இன்று(08) இடம்பெற்றது.
யாழ். மாவட்ட செயலாளர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.


வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ம், 28ம் திகதிகளில் நடைபெற இருக்கின்றது.
இவ்வருடம் இலங்கையிலிருந்து 4000 பக்தர்களும், இந்தியாவில் இருந்து 4000 பக்தர்களும் பங்குபற்ற அனுமதிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு பங்குபற்றுவோருக்கான சுகாதாரம், போக்குவரத்து உட்பட அடிப்படை வசதிகள், பாதுகாப்பு, ஏற்பாடுகள் மற்றும் உணவு வழங்கள் போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.


கூட்டத்தில், யாழ். மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெயரட்ணம் அடிகளார், யாழ் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள், பொலிஸார், யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர், நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர், துறைசார் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் நடைபெறவுள்ள கரப்பந்தாட்ட பிறிமியர் லீக் சுற்றுப்போட்டி!
யாழ்.பல்கலையின் புதிய துணைவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி!
T20, சூப்பர் 8 போட்டியில், இலங்கையை வென்ற நியூசிலாந்து அணி!
தென்மராட்சியில் கையெழுத்துப் போராட்டம்!