கடமை நேரத்தில் அபாயகரமான போதைப்பொருட்களை பயன்படுத்திய பேருந்து சாரதிகள் கடவத்தை பேருந்து
நிலையத்தில் நேற்று (12) கண்டறியப்பட்டனர்.
மேற்கொள்ளப்பட்ட விசேட போதைப்பொருள் பரிசோதனையின் போது, ஏழு பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட வேலைத்திட்டத்தின்கீழ் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, கடவத்தை பேருந்து நிலையத்தில் சுமார் 148 சாரதிகள் மற்றும் நடத்துநர்களிடம் எழுமாறான போதைப்பொருள் பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன்போதே, அவர்களில் ஏழு பேர் அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்தியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும், சீர்குலைந்து வரும் வீதி ஒழுக்கத்தை நிலைநாட்டவும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அபாயகரமான போதைப்பொருட்களைப் பயன்படுத்திய சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தேர்தல் வாக்குறுதிகளை அரசு நிறைவேற்றவில்லை எனத் தெரிவித்து சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்!
யாழ்.துன்னாலை கொலை தொடர்பாக மூவர் கைது!
வல்வெட்டித்துறை வேவிலில் அமைக்கப்பட்ட வீடு பயனாளியிடம் கையளிப்பு!
பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நுழைந்த இலங்கை மகளிர் அணி!