கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!

திருகோணமலை, கந்தளாய் ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக நின்ற பாரிய மரமொன்று முறிந்து விழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் இன்று (11) இடம்பெற்றுள்ளது.

இதனால் வைத்தியசாலைக்கு முன்பாக தரித்து நின்ற வாகனங்கள் சில சேதமடைந்துள்ளன. முச்சக்கரவண்டி ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளது.

மேலும், மின்சார விநியோக கம்பிகள் அறுந்து விழுந்துள்ளன. அங்கிருந்த புத்தர் சிலைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
அதனையடுத்து மரத்தை அகற்றும் பணியிலும்,மின்சார வயர்களை சீர் செய்யும் நடவடிக்கையிலும் சம்பந்தப்பட்ட தரப்பினர் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version