மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டிருந்த பதற்றமான பாதுகாப்பு சூழ்நிலையின் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த சில சர்வதேச விமான சேவைகள் தற்போது படிப்படியாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன் ஒரு பகுதியாக, வளைகுடா நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் சூரிக் நகரத்துக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளன.
துபாயை தளமாகக் கொண்ட Emirates விமான நிறுவனம் கடந்த வாரம் முதல் துபாய்–சூரிக் வழித்தடத்தில் தனது சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
அதேபோல் அபுதாபியை தளமாகக் கொண்ட Etihad Airways நிறுவனமும் விரைவில் சூரிக் நோக்கி தனது விமான சேவைகளை ஆரம்பிக்கத் தயாராகி வருகிறது.
இதற்கிடையில் சுவிட்சர்லாந்தின் தேசிய விமான நிறுவனமான Swiss International Air Lines, எதிர்வரும் புதன்கிழமை முதல் சூரிக் மற்றும் துபாய் இடையிலான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளது.
அதே நாளில் சூரிக் மற்றும் அபுதாபி இடையேயான விமான சேவைகளும் மீண்டும் இயக்கப்பட உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
பாதுகாப்பு சூழ்நிலை மற்றும் பிராந்திய அரசியல் நிலைமைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிணை!
சுற்றுலா மேம்பாட்டுப் திணைக்களத்தின் நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் பஷில் ராஜபக்ஷவை கைதுசெய்ய நீதிமன்றம் உத்தரவு!
யோஷித ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் கைது!
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று ஆஜராக முடியாது சட்டத்தரணிகள் ஊடாக யோஷித பதில்!