கண்டி, கலஹா, தெல்தோட்டாவத்தை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் அருகே, ஒரு பெரிய நீல நிற பாறை தோன்றியதை அடுத்து, அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பாறை இரத்தினக் கல்லாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
டித்வா சூறாவளியின் போது ஏற்பட்ட மண் சரிவுடன் இந்த பாறை உயர்ந்த பகுதியிலிருந்து தாழ்வான பகுதிக்கு தள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
மண்சரிவு பல வீடுகளையும், அப்பகுதியிலுள்ள ஆலயத்தையும் சேதப்படுத்தியது. இந்த ஆலயம் மார்ச் மாதம் திறக்க திட்டமிடப்பட்டது.
பேரழிவுக்குப் பிறகு, ஆலயத்துக்கு அருகில் பல்வேறு வண்ணங்களில் ஒரு கல் காணப்பட்டதாகக் கூறப்பட்டது.
அந்த இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட ஒளி வெளிப்படுவதாக தகவல் பரவியதால், பாறையைப் பார்க்க ஏராளமான மக்கள் வந்துள்ளனர்.
மேலும் அதைக் கட்டுப்படுத்த பொலிஸார் பாதுகாப்பை நிறுத்தியுள்ளனர்.
சுமார் ஒரு டன் எடையுள்ள இந்தப் பாறையை நேற்று(19) மாலை இரத்தினக் கல் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் குழு ஆய்வு செய்தது.
இது ஒரு கொத்து வடிவிலுள்ள ஒரு சிறப்பு வகை பாறை எனவும் இரத்தினக் கல்லா என்பதை இன்னமும் உறுதிப்படுத்த முடியாமல் உள்ளது எனவும் இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணைய அதிகாரிகள் சில நாட்களில் மீண்டும் அந்த இடத்தை ஆய்வு செய்ய உள்ளனர், மேலும் பாறை தொடர்பாக நிரந்தர முடிவு எட்டப்படும் வரை சிறப்பு பாதுகாப்பெ வழங்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்க வாய்ப்பில்லை: நீதியமைச்சர் ஹர்சன தெரிவிப்பு!
யாழுக்கு மூன்றுநாள் விஜயமாக வருகைதந்துள்ள கியூபா தூதுவர்!
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
கொக்குவில் பிரம்படிப் படுகொலையின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!