கிளிநொச்சி – முரசுமோட்டை -நான்காம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று(12) பிற்பகல் 4.40 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விஸ்வமடு பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த காரும், வவுனியாவிலிருந்து விசுவமடு நோக்கி பயணித்த பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இதன்போது காரில் பயணித்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலணை வைத்தியசாலை வைத்தியர்களுக்கு பிரியாவிடை!
பிரதமரை கல்வி அமைச்சர் பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி விமல் சத்தியாக்கிரகப் போராட்டம்!
இலங்கை வந்த சீன வெளிவிவகார அமைச்சர்!
நாட்டை மீள கட்டியெழுப்ப நிதி கையளித்த புலம்பெயர் ஈழத்தமிழ் தொழிலதிபர்!