பயங்கரவாதச் சட்டத்துக்கு எதிராக யாழில் போராட்டம்!

நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு
விலக்கிக்கொள்ளப்படவேண்டும் எனக்கோரி யாழ்.நகரில் இன்று(28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.பொது நூலக முன்றலில் ஆரம்பமாகிய போராட்டம், ஏ9 வீதியூடாக பயணித்து ஆளுநர் அலுவலகம் வரை சென்றது.

அங்கு கண்டன அறிக்கை வாசிக்கப்பட்டு அறிக்கையை ஜ.நாவுக்கு அனுப்பிவைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டதோடு போராட்டம் நிறைவடைந்தது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொது அமைப்புகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Exit mobile version