சந்தைக்கு இன்று முதல் எரிவாயு விநியோகம் – லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு!

லாஃப்ஸ் எரிவாயுவை ஏற்றிய கப்பல் இலங்கையை இன்று(28) வந்தடைந்ததாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, இருப்பிலுள்ள எரிவாயு உடனடியாக இன்று முதல் சந்தைக்கு வழங்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

வீட்டு நுகர்வோர் இன்று முதல் வழக்கம் போல் லாஃப்ஸ் எரிவாயுவை விற்பனை முகவர்கள் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையிலுள்ள 30 ஆயிரம் மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்ட எரிவாயு இறக்குமதி முனையத்தில் ஏற்பட்ட தற்காலிகத் தடையால், வழமையான இறக்குமதி நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக நிறுவனம் முன்னர் தெரிவித்திருந்தது.

Exit mobile version