பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் முகமாக தபால் கையெழுத்துப் போராட்டம் யாழ்.பல்கலைக்கழக முன்றலில் இன்று (27) முன்னெடுக்கப்பட்டது.



பொது அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து இந்த தபால் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.



நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும், பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைவு
விலக்கிக்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு
வலுச் சேர்க்கும் வகையில், மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நோக்காக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.




கால்நடைகள் திருடுபவர்களை பிடித்து தருபவர்களுக்கு 25000 ரூபா சன்மானம் – பண்ணையாளர்கள் அறிவிப்பு!
பொடி லெசி இலங்கைக்கு அழைத்து வருகை!
இலங்கை – சுவிஸ் உறவின் 70 ஆண்டுகள்!
யானை தாக்கிப் பெண் பலி: இருவர் காயம்!