இலங்கைக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையில் 70 ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் இராஜதந்திர உறவைச் சிறப்பிக்கும் முகமாக, இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் ’70 Years’ எனும் சிறப்புக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்தக் கண்காட்சி மார்ச் 6 ஆம் திகதி கொழும்பு Radicle Gallery வளாகத்தில் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்படவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மார்ச் 7 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை தினமும் பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1956 ஆம் ஆண்டு முதல், இலங்கையும் சுவிட்சர்லாந்தும் இராஜதந்திரம், வர்த்தகம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல துறைகளில் வலுவான இணைப்பைக் கொண்டுள்ளன.
இந்நிலையில்,
இந்தக் கண்காட்சி இலங்கை – சுவிட்சர்லாந்து உறவை நிலை நிறுத்தவும் வலுப்படுத்தவும் அதற்காகப் பங்களித்தவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளும் முயற்சியாகவும் அமைந்துள்ளதாக சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
புகைப்படங்கள், கண்காட்சி பலகைகள், தனிப்பட்ட சான்றுரைகள் மூலம், இருநாட்டு உறவுகளை வலுப்படுத்திச் சாதனைகளை உருவாக்கியவர்களின் சேவைகள் இந்தக் கண்காட்சியில் சிறப்பிக்கப்படவுள்ளன.

ஹோர்முஸ் நீரிணை போக்குவரத்தை வழமைக்கு கொண்டுவருமாறு ஈரானிடம் வலியுறுத்தியது சீனா!
வழமைக்குத் திரும்பிய எரிவாயு விநியோகம்!
தான் கண்டெடுத்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த யாழ்.பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர்!
எஹெலியகொட விபத்தில் 13 பேர் காயம்!