டுபாய் கடற்கரைக்கு அப்பால் மசகு எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது.
குவைத் கொடியுடன் பயணித்த ‘அல்-சல்மி’ (Al-Salmi) என்ற கப்பலே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ஏவுகணைகள் அல்லது வெடிபொருட்கள் தாங்கிய தானியங்கி வானூர்திகள் மூலம் வர்த்தகக் கப்பல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடர்ச்சியாக
இந்த தாக்குதல் அமைந்துள்ளது.
தற்போதைய சந்தை விலையின்படி 200 மில்லியன் டொலர்களுக்கும் அதிக மதிப்புள்ள, சுமார் 2 மில்லியன் கொள்கலன் மசகு எண்ணெயை ஏற்றிச் செல்லக்கூடிய திறன் கொண்டது இந்தக் கப்பல் உள்ளது.
இந்தக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
சேதங்கள் மதிப்பீடு செய்யப்பட்டு வருவதாகவும், எண்ணெய் கசிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் கப்பலின் உரிமையாளரான குவைத் பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இருப்பினும், தானியங்கி வானூர்தித் தாக்குதலுக்குப் பின்னர் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடிந்ததாகவும், எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும் துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்பிரல் மாதத்திற்கான எரிவாயு கையிருப்பில் – எரிவாயு நிறுவனங்கள் தெரிவிப்பு!
அமெரிக்க ஐனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை, பதவி விலக்க் கோரி போராட்டங்கள்!
லெபனானில் இடம்பெற்ற தாக்குதலில் ஊடகவியலாளர்கள் மூவர் பலி!
மத்திய கிழக்கு நிலவரம் தொடர்பாக உரையாடிய ரஷ்ய – ஈரான் வெளிவிவகார அமைச்சர்கள்!