யாழ்.தென்மராட்சி கொடிகாமம் பொதுச்சந்தையின் மரக்கறி வியாபாரப் பகுதி புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
அதற்கான நிகழ்வு
சாவகச்சேரி பிரதேச சபைத் தவிசாளர் தலைமையில் இன்று(29) காலையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில், பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் சந்தை வியாபாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இயங்கு நிலையற்றிருந்த கட்டடம் ஒன்றை சாவகச்சேரி பிரதேச சபை, மரக்கறி வியாபாரத்திற்கு ஏற்ற வகையில் புனரமைப்புச் செய்து
மரக்கறி வியாபார தொகுதியாக மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தைத் திருநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் மரதன்!
கந்தளாய் வைத்தியசாலை முன்பாக மரம் முறிந்து வீழ்ந்ததால் வாகனங்கள் சேதம்!
வடக்கு புதையிரத பாதை மூன்று மாதங்கள் மூடல்!
கிளிநொச்சியில் குளங்கள் வான் பாய்கின்றன!