2025ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 17ஆம் திகதி முதல் திட்டமிட்ட வகையில் நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருவதாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய இம்மாதம் 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறவுள்ளன.
நாடு முழுவதும் 3,545 பரீட்சை மையங்களில் பரீட்சையை நடாத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், சாதாரண தரப் பரீட்சைக்கான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் ஆகியவற்றுக்கு இம்மாதம் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த தடை பரீட்சை நிறைவடையும்வரை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

யோஷித ,மற்றும் கரன்னாகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்!
அருட்தந்தை ஜிம் பிறவுண் உள்ளிட்ட 22 பேரின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியிலுள்ள மதுபானசாலையை அகற்றக் கோரி மக்கள் போராட்டம்!
செம்மணி அகழ்வுப் பணியின் 3 ஆம் கட்டம் நிறைவு!