சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பிரதிப் பணிப்பாளர் Ashish Khanna தலைமையிலான குழுவினருக்கும், பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.



நாடாளுமன்ற வளாகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று(07) இடம்பெற்றது.
சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பிற்கும், இலங்கைக்கு இடையிலான கூட்டு மூலோபாயத்தைச் செயற்படுத்துதல், அதனை முன்னெடுத்துச் செல்லுதல்,
நாட்டின் சூரிய சக்தி பயன்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவது குறித்தும் இந்தக் கலந்துரையாடலின் போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.


மேலும், மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் சூரிய தொழில்நுட்பப் பயன்பாட்டு வள மையமொன்றை நிறுவுதல்,மின் கலங்களின் சேமிப்பு கட்டமைப்புகளை ஒருங்கிணைப்பதற்கான ஆதரவை வழங்குதல் குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

யாழ் நகர அபிவிருத்தி தொடர்பாக ஆராய்ந்தபிரதி அமைச்சர் எரங்க குணசேகர!
வசந்த கரன்னாகொட, யோஷிதவுக்கு எதிரான ஊழல் வழக்கில் முன்விளக்க மாநாட்டிற்கு அழைக்குமாறு உத்தரவு!
எயார்பஸ் வழக்கு: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தமிழீழக் கோரிக்கையை எதிர்க்கும் அர்ச்சுனா எமது மேடைகளில் இருப்பதில் தவறில்லை – உதய கம்மன்பில தெரிவிப்பு!